ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா
ஈரோடு
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று முன்தினம் 319 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 31 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 935 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 29 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 7 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.
கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருப்பதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தற்போது 172 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story