சேலம் மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று


சேலம் மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று
x

சேலம் மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 40 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18 பேர், சேலம் ஒன்றியத்தில் 4 பேர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், தாரமங்கலம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், எடப்பாடி, காடையாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்த தலா 2 பேர், சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் உள்பட 246 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 17 பேர் குணமடைந்தனர். அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


Next Story