சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 41 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 41 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 43 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 41 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 19 பேர், கொளத்தூர், மேச்சேரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
மேலும் சேலத்துக்கு ஈரோடு, நாமக்கல்லில் இருந்து வந்த தலா 2 பேர், சென்னை, கரூரில் இருந்து வந்த தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் உள்பட 274 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 29 பேர் கொரோனாவுக்கு குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.