100 மையங்களில் தடுப்பூசி முகாம்


100 மையங்களில் தடுப்பூசி முகாம்
x

100 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை தாசில்தார் செந்தில் வேல் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோரின் உத்தரவின்படி தாலுகாவில் சுழற்சி முறையில் நடைபெற்ற 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்களை தாசில்தார் செந்தில்வேல் முருகன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப் பட்ட பகுதிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் மூலம் பொதுமக்களை தடுப்பூசி செலுத்த அழைத்துவர அறிவுரை வழங்கினார்.


Next Story