மதுரையில் புதிதாக 30 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக 30 பேருக்கு கொரோனா
x

மதுரையில் புதிதாக 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மதுரை


தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்தது. தற்போது அந்த பாதிப்புகள் குறைந்த வண்ணம் உள்ளது. மதுரையிலும் தினசரி பாதிப்பு 50-க்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது பாதிப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. அதன்டி நேற்று புதிதாக 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று புதிதாக 49 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். தகுதிஉள்ள நபர்கள் சரியான கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. எனவே, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.


Next Story