சேலம் மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 62 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று கொரோனாவின் பாதிப்பு 70 ஆக உயர்ந்துள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் 27 பேர், ஓமலூரில் 6 பேர், பனமரத்துப்பட்டியில் 4 பேர், வீரபாண்டி, மேச்சேரி, காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், தாரமங்கலம், மகுடஞ்சாவடி, சேலம் ஒன்றியம், ஆத்தூர், தலைவாசல், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், நங்கவள்ளி, கொளத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு, மேட்டூர், இடங்கணசாலை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் சேலத்துக்கு வந்த ஈரோட்டை சேர்ந்த 2 பேர், தர்மபுரியை சேர்ந்த ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story