ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா
x

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 769 பேருக்கு பரிசோதனை செய்ததில் 55 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்துள்ளது. அதன்படி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 878 ஆக உயர்ந்தது. நேற்று 55 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 806 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 344 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story