33 பேருக்கு கொரோனா


33 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 34 பேருக்கு கொரோனா பாதித்தது. நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகர் பகுதியில் 11 பேர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, வீரபாண்டி, மேட்டூர், கொளத்தூரில் தலா ஒருவர், காடையாம்பட்டியில் 2 பேர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்த 9 பேர் உள்பட 33 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story