சேலம் அருள் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் கொரோனா


சேலம் அருள் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் கொரோனா
x

சேலம் அருள் எம்.எல்.ஏ.வுக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்

அருள் எம்.எல்.ஏ.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அருள். பா.ம.க. மாநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். ஏற்கனவே கொரோனா முதல் அலையில் இவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.

இதைத்தொடர்ந்து கொரோனா முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் அருள் எம்.எல்.ஏ. செலுத்திக்கொண்டார். அதன்பிறகு அவர் தொடர்ந்து மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

மீண்டும் கொரோனா

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அருள் எம்.எல்.ஏ. தினமும் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தநிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்த போது, அருள் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

தொடர்ந்து அவர் மருத்துவ ஆலோசனையை ஏற்று அஸ்தம்பட்டியில் உள்ள தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். 2-வது முறையாக அருள் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பா.ம.க. நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story