நெல்லையில் 46 பேருக்கு கொரோனா


நெல்லையில் 46  பேருக்கு கொரோனா
x

நெல்லையில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக நெல்லை தென்காசி மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 46 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.Next Story