சேலம் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில்  புதிதாக 10 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 11 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 2 பேரும், எடப்பாடி, வீரபாண்டி, நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும், தலைவாசல் மற்றும் கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 2 பேரும், ஈரோட்டில் இருந்து சேலம் வந்த ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story