சேலம் மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பு: புதிதாக 13 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பு:  புதிதாக 13 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று தொற்று பாதிப்பு அதிகரித்தது. அதாவது மாவட்டம் முழுவதும் புதிதாக 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சி பகுதியில் 5 பேருக்கும், எடப்பாடி, நங்கவள்ளி, மேட்டூர் பகுதிகளில் தலா ஒருவருக்கும், மகுடஞ்சாவடியில் 4 பேர் உள்பட 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story