குமரியில் புதிதாக 14 பேருக்கு கொரோனா


குமரியில் புதிதாக 14 பேருக்கு கொரோனா
x

குமரியில் புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜூன் மாத தொடக்கத்தில் முதல் பாதிப்பு எண்ணிக்கை 2-ஆக இருந்தது. பின்னர் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் குமரியில் 26 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் 421 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 14 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது குருந்தன்கோடு பகுதியில் 2 பேரும், திருவட்டார் தாலுகாவில் 4 பேரும், முன்சிறை பகுதியில் 3 பேரும், தக்கலை பகுதியில் 3 பேரும், கொல்லங்கோடு பகுதியில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story