தமிழகத்தில் 1,484 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 484 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,461 இல் இருந்து 1,484 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 543 இல் இருந்து 632 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,222 லிருந்து 8,970 ஆக உயர்ந்துள்ளது. 736 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.தமிழகத்தில் கொரோனாவே இல்லாத மாவட்டங்கள் என இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story