மதுரையில் புதிதாக 15 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக 15 பேருக்கு கொரோனா
x

மதுரையில் கொரோனாவுக்கு புதிதாக 15 பேர் பாதிக்கப்பட்டனர். அதன் மூலம் மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

மதுரை

மதுரையில் கொரோனாவுக்கு புதிதாக 15 பேர் பாதிக்கப்பட்டனர். அதன் மூலம் மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தினசரி பாதிப்பு 500-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது, 1,472 ஆக உயர்ந்துள்ளது. இதனால், தமிழக அரசு மீண்டும் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.

மதுரையை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 8 பேர் குணம் அடைந்தனர். புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை.

மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பின் மூலம், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் சிகிச்சையில் இருக்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.

தடுப்பூசி

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, குமரி போன்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது மதுரையில் கொரோனா பாதிப்பு குறைவுதான். இருப்பினும் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மதுரையில் தினமும் 500 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தற்போதுள்ள கொரோனா இளம் வயதினரை அதிகம் பாதிக்கிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாலும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியதன் காரணமாகவும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் 60 வயதை கடந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் சரியான கால இடைவெளியில் 2-ம், 3-ம் கட்ட தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்" என்றனர்.


Related Tags :
Next Story