புதிதாக 23 பேருக்கு கொரோனா


புதிதாக 23 பேருக்கு கொரோனா
x

மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்

மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 16 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சி பகுதியில் 14 பேரும், கெங்கவல்லி, வாழப்பாடி, மேட்டூரில் தலா ஒருவர், சங்ககிரி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர் என 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்பத்திரிகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


Next Story