பெரம்பலூரில் 43 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்தில் 3 பேரும், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 6 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 6 பேரில் தலா 3 பேர் ஆண்கள், பெண்கள் அடங்குவர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 43 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 42 பேர் வீட்டு தனிமையிலும், ஒருவர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 161 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாவட்டங்களில் பொது இடங்களில் பெரும்பாலானோர் முககவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. இதனால் இன்னும் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.