குமரியில்புதிதாக 6 பேருக்கு கொரோனா


குமரியில்புதிதாக 6 பேருக்கு கொரோனா
x

குமரியில்புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில்புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இது அடுத்த அலை பரவலுக்கான அறிகுறி என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்து இருக்கிறார்கள்.

இதனால் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே குமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த சோதனையில் ஒரே நாளில் 9 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 364 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது குருந்தன்கோடு ஒன்றியத்தில் 3 பேருக்கும், கிள்ளியூர், திருவட்டார் மற்றும் தோவாளை தாலுகாக்களில் தலா ஒருவரும் என மொத்தம் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.


Next Story