சேலம் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில்  புதிதாக 6 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்

சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக மாநகராட்சி பகுதியில் 4 பேருக்கும், அயோத்தியாப்பட்டணம், இடங்கணசாலை ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 457 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story