சேலம் மாவட்டத்தில் புதிதாக 61 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில்  புதிதாக 61 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் புதிதாக 61 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 67 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தது. நேற்று புதிதாக 61 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி சேலம் மாநகராட்சியில் 27 பேருக்கும், சங்ககிரி, தாரமங்கலம், கொளத்தூர், எடப்பாடி, மகுடஞ்சாவடி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர். பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணத்தில் தலா 2 பேர், ஆத்தூரில் 3 பேர், வீரபாண்டி, காடையாம்பட்டியில் தலா 4 பேர், ஓமலூரில் 7 பேர் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.


Next Story