சேலம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில்  7 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மாநகர் பகுதியில் 4 பேர், ஓமலூர், கொங்கணாபுரம், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 7 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 470 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 1 லட்சத்து 25 ஆயிரத்து 667 பேர் குணமடைந்து உள்ளனர். 1,762 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


Next Story