விழுப்புரம் கலெக்டர் மோகனுக்கு கொரோனா


விழுப்புரம் கலெக்டர் மோகனுக்கு கொரோனா
x

விழுப்புரம் கலெக்டர் மோகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன்(வயது 48), கடந்த வாரம் விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் சில இடங்களில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதோடு அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சோர்வுடன் காணப்பட்ட அவர் காய்ச்சல், சளி, இருமல் ஆகிய தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் நேற்று காலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதன் மருத்துவ பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் மோகன், சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவரை டாக்டர்கள் அவ்வப்போது கண்காணித்து உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறார்கள். கலெக்டர் மோகன், 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story