மாவட்டத்தில் 74 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் 74 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் 74 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 77 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 23 பேர், வீரபாண்டி, பனமரத்துப்பட்டியில் தலா 4 பேர், ஓமலூரில் 3 பேர், மேட்டூர், ஆத்தூரில் தலா 2 பேர், அயோத்தியாப்பட்டணம், காடையாம்பட்டி, கொளத்தூர், மகுடஞ்சாவடி, மேச்சேரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து வந்த 6 பேர், ஈரோடு, வேலூரில் வந்த தலா 5 பேர், கரூர், சென்னையில் இருந்து வந்த தலா 4 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story