கோவையில் அதிகரிக்கும் கொரோனா


கோவையில் அதிகரிக்கும் கொரோனா
x

கோவை மாவட்டத்தில் குறைந்து இருந்த கொரோனா தினசரிபாதிப்பு தற்போது உயர்ந்து வருகிறது. எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை,

கோவை மாவட்டத்தில் குறைந்து இருந்த கொரோனா தினசரிபாதிப்பு தற்போது உயர்ந்து வருகிறது. எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினசரி பாதிப்பு அதிகரிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா நான்காவது அலை குறித்த அச்சம் எழுந்துள்ளது. தமிழ்நாடு, மராட்டியம், கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார்.

கோவையில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கில் கொரோனா தொற்று இருந்து வந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கில் இருந்து இரட்டை இலக்காக மாறியுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் 47 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது வரை கொரோனா காரணமாக 2,617 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

முகக் கவசம்

கோவை மாநகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story