தமிழகத்தில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா தொற்று
x

தமிழகத்தில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 491 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 68 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 25 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,035 ஆக உள்ளது.

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story