தமிழகத்தில் இன்று மேலும் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!


தமிழகத்தில் இன்று மேலும் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!
x

தமிழகத்தில் மேலும் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் உயர்ந்து வருகிறது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 552- ஆக பதிவான நிலையில், இன்று இன்றைய பாதிப்பு 589- ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் இன்று புதிதாக 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,59,586 ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 286 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 026 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,313-லிருந்து 2,694 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து இன்று 208 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,18,866 ஆக உள்ளது.


Next Story