34-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


34-வது கட்ட கொரோனா   தடுப்பூசி சிறப்பு முகாம்
x

34-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 98.99 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி முதல் தவணையும், 78.13 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 88.59 சதவீதம் முதல் தவணையும், 74.98 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 90.02 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 65.81 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 34-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் 1,341 இடங்களில் நேற்று நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ெரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பணியாற்றினார்கள்.

1 More update

Next Story