கொரோனா தடுப்பு நடவடிக்கை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


கொரோனா தடுப்பு நடவடிக்கை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
x

தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. 100 க்கு கீழ் இருந்த தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது .இதில் நேற்று தமிழகத்த்தில் தினசரி கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது .

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார் .

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது .இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்


Next Story