வால்பாறையில் கொரோனா பரவல் அதிகரிப்பு: சுற்றுலா பயணிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரம்


வால்பாறையில் கொரோனா பரவல் அதிகரிப்பு:  சுற்றுலா பயணிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரம்
x

வால்பாறையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சுற்றுலா பயணிகள்

வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை காரணமாக கடந்த 2 வாரமாக வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணி்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படத் தொடங்கி வருவதாலும் வெளியூர்களில் இருந்து அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்கு வருகிறார்கள்.

தடுப்பூசி முகாம்

தற்போது வால்பாறையில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி அலுவலக பகுதி, காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதி உள்பட மக்கள் கூடும் இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் வால்பாறை நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் எஸ்டேட் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்புசிகள் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story