சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை: ஆலோசனை கூட்டத்தில் முடிவு


சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை: ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியானது.

சென்னை,

சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா திரிபு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

இதைதொடர்ந்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது. உலகளவில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


Next Story