கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரம்
தொற்று அதிகரித்ததால் கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.
தொற்று அதிகரித்ததால் கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல்
நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்று திடீரென்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் பன் னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் சோத னையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்திலும் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி 2 சதவீதம் ரேண்டம் முறையில் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். என்ற கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி, இந்த மாதம் கடந்த 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை கோவை விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
9 பேருக்கு தொற்று
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த ஒரு மாதத் திற்கு முன்பு வரை மாதம் ஒருவருக்கோ அல்லது 2 மாதங்களுக்கு ஒருவருக்கோ தான் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. தற்போது வாரத்திற்கு 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
இதனால், வெளிநாட்டு பயணிகள் தீவிர காண்காணிப்பிற்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவை விமான நிலையத்திற்கு கடந்த 1-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 16 விமானங்களில் 2 ஆயிரத்து 127 பயணிகள் கோவை வந்தனர். அதில் 180 பேருக்கு பரிசோதனை செய்ததில் 9 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதில் கோவையை சேர்ந்தவர்கள் 2 பேர், அரியலூர், மதுரை, நாமக்கல், நீலகிரியை சேர்ந்த தலா ஒருவர், கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர், கேரளாவை சேர்ந்த 2 பேர் ஆவர்.
சிகிச்சைக்கு ஏற்பாடு
பிற மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோ னா தொற்று கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் மாநில நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கோவையை சேர்ந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
கோவையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பொது மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்பட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்போது தான் தொற்று பாதிப்பு மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 66 பேருக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.