கொரோனா தடுப்பூசி முகாம்
குத்தாலம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது
மயிலாடுதுறை
குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமம் அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. சுகாதாரத்துறை சார்பில் நடந்த இந்த முகாமில் அசிக்காடு துணை சுகாதார நிலைய செவிலியர் மீனாட்சி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினார். இதில் அசிக்காடு, முருகன்தோட்டம், செங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதேபோல குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரூராட்சி மன்ற வளாகம், சோழீஸ்வரர் நடுநிலைப்பள்ளி மற்றும் கோமல், கொழையூர், பெருமாள்கோவில் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
Related Tags :
Next Story