சேலம் மாவட்டத்தில் 85 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் 85 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்று நடந்த சிறப்பு முகாமில் போடப்பட்டது.
சேலம்
சேலம்:
கொரோனா தொற்று சமீபகாலமாக மீண்டும் அதிகளவில் பரவ தொடங்கி உள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி நேற்று சேலம் சூரமங்கலத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 5,240 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மொத்தம் 85 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
Related Tags :
Next Story