கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி முன்னிலையில், 275 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தொடங்கி வைத்தார். தென்மலை பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த முகாமை பஞ்சாயத்து தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன் தொடங்கி வைத்தார்.

நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் லட்சுமிராமன், கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், சித்ரா தேவி, கணேசன், கருப்பையா பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story