கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

நெல்லையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

திருநெல்வேலி

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியிலும் ஏராளமான இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதுதவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

இதில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை செலுத்த தவறியவர்கள், முன்னெச்சரிக்கை தவணை செலுத்த தகுதியானவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணுடன் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள முகாமிற்கு சென்று உரிய தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். மாநகர பகுதியில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் முகாம்களில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இதேபோல் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடமான சந்திப்பு ரெயில் நிலையத்திலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

1 More update

Next Story