கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

வாணியம்பாடியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் ஆலங்காயம் வட்டாரம் மற்றும் வாணியம்பாடி நகரப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடந்தது.

இதில் சுகாதார நிலைய டாக்டர்கள், நடமாடும் மருத்துவ குழுவினர் மற்றும் நர்சுகள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், வாணியம்பாடி தாசில்தார் சம்பத் ஆகியோர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் பகுதிகளில் திடீரென ஆய்வு செய்தனர்.

இதில் சுகாதார பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

1 More update

Next Story