2 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


2 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று நடைபெற்றது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.

அருணாசலேஸ்வரர் கோவில், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாம்களில் மாலை 6 மணி நிலவரப்படி 75 ஆயிரத்து 801 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர்.

இதில் சுமார் 65 ஆயிரம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story