2,675 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் 2,675 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
விழுப்புரம்
விழுப்புரம்,
கொரோனா தொற்றை முழுமையாக தடு்க்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் அரசு மருத்துவமனை, பஸ் நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 2,675 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இப்பணியில் 10,000-க்கும் மேற்பட்ட முன் களப்பணியாளர்களும், தன்னார்வஅமைப்பினரும் ஈடுபட்டனர். இதில் விழுப்புரம் நகராட்சி சார்பில் 42 மையங்களில் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு இரண்டாம் மற்றும் பூஸ்டர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
Related Tags :
Next Story