தேனி மாவட்டத்தில் 671 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்: நாளை மறுநாள் நடக்கிறது


தேனி மாவட்டத்தில் 671 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்: நாளை மறுநாள் நடக்கிறது
x

தேனி மாவட்டத்தில் 33-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 671 இடங்களில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது

தேனி

தேனி மாவட்டத்தில் 33-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 671 இடங்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மாவட்டத்தில் 671 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம்கள் மூலம் 60 ஆயிரத்து 390 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு தேவையான தடுப்பூசி மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம்கள் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் (பொறுப்பு) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அரசின் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் கால மீட்பு மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.


Next Story