மாவட்டம் முழுவதும் 788 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


மாவட்டம் முழுவதும் 788 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x

வேலூர் மாவட்டம் முழுவதும் 788 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த பணியினை 3,940 பேர் மேற்கொண்டனர்.

வேலூர்

வேலூர் மாவட்டம் முழுவதும் 788 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த பணியினை 3,940 பேர் மேற்கொண்டனர்.

தடுப்பூசி முகாம்

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் 35-வது கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், பஸ்நிலையங்கள், உழவர்சந்தைகள், பஜார், ஆட்டோநிறுத்தம், பள்ளிகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 788 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

3,940 பணியாளர்கள்

இதுகுறித்து பொதுமக்களிடையே அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் சுகாதாரத்துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் 2-ம் தவணை பெரும்பாலானோர் செலுத்தி உள்ளனர். இந்த சிறப்பு முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த கொரோனா தடுப்பூசி போடும் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 3,940 பணியாளர்கள் ஈடுபட்டனர் என்றனர்.

வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் நடந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா, மண்டல குழு தலைவர் நரேந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, நகர்நல அலுவலர் முருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.


Next Story