ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்


ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
x

ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அரியலூர்

ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் அரியலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை ஆகியவை இணைந்து ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. இதனை ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமாகிய லதா தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ் முன்னிலை வகித்தார். முகாமில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 110 பேருக்கு ரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், சுகாதாரப்பணிகள் ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் வசந்த ஹாசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story