சுல்தான்பேட்டை, வால்பாறையில் கொரோனா தடுப்பூசி முகாம்
சுல்தான்பேட்டை, வால்பாறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை, வால்பாறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
கொரோனா தடுப்பூசி முகாம்
சுல்தான்பேட்டைஒன்றியத்தில் 30 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், முதல் தவணை, 2ம் தவணை பூஸ்டர் தடுப்பூசி என 450 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் இந்த மாதம் 30-ந் தேதிக்குள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரப்பணிகள்துணை இயக்குனர் டாக்டர் அருணா, அறிவுறுத்தல்படியும், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா ஆலோசனையின் பேரிலும் தடுப்பூசி பணிகள் நடைபெற்றது. முகாமில் நூல் மில், பனியன் உற்பத்தி தொழிற்சாலை, காளான் உற்பத்தி பண்ணை தொழிலாளர்கள், பொதுமக்கள் பயன்பெற்றார்கள்.முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ் ஆகியோர் செய்து இருந்தனர். இதேபோல், பொள்ளாச்சி, ஆழியாறு, கோட்டூர் பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது.
வால்பாறை
வால்பாறை, முடீஸ், சோலையாறு நகர் ஆகியஅரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் டாக்டர்கள் மேற்பார்வையில் பகுதி சுகாதார செவிலியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று தாக்குதல் ஏற்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி போட விடுபட்ட பொது மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முடீஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மூன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் மொத்தம் 686 பேருக்கு போடப்பட்டது.