திருமுல்லைவாயலில் கொரோனா தடுப்பூசி முகாம்


திருமுல்லைவாயலில் கொரோனா தடுப்பூசி முகாம்
x

திருமுல்லைவாயலில் நடைபெற்ற 31-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர், வாணி மஹால் பகுதியில் நேற்று காலை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற 31-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ், பூந்தமல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், மண்டல குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story