கொரோனா தடுப்பூசி முகாம் - கலெக்டர் ஆய்வு


கொரோனா தடுப்பூசி முகாம் - கலெக்டர் ஆய்வு
x

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 32-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, ஜே.என்.சாலை, பஜார் வீதி, ரெயில் நிலையம், பெரிய குப்பம் ஆகிய 12 பகுதிகளில் 32-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவி ஸ்ரீ, திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story