400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது


400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
x

400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 34-வது கட்டமாக மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இம்முகாம்களில் 10,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவ மனைகள், 367 மற்ற இடங்கள் என மொத்தம் 400 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் செலுத்தி கொள்ளலாம்.

1 More update

Next Story