அரியலூரில் ஒரேநாளில் 25,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அரியலூரில் ஒரேநாளில் 25,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அரியலூர்
தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 31-வது சிறப்பு முகாம்களை நேற்று நடத்தியது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 25 ஆயிரத்து 360 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story