திண்டுக்கல் மாவட்டத்தில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


திண்டுக்கல் மாவட்டத்தில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

திண்டுக்கல் மாவட்டத்தில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திண்டுக்கல்

தமிழகம் முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 802 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் ஆர்வமாக வந்து‌ கொரோனா‌ தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இதில் 166 பேருக்கு முதல் தவணையும், 8 ஆயிரத்து 768 பேருக்கு 2-ம் தவணையும், 33 ஆயிரத்து 450 பேருக்கு 3-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரேநாளில் 42 ஆயிரத்து 384 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story