வால்பாறையில் 451 பேருக்கு கொரோனா தடுப்பூசி


வால்பாறையில் 451 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

வால்பாறையில் 451 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் நேற்று 36-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. வால்பாறை, முடீஸ், சோலையாறு நகர் ஆகிய மூன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் இந்த சிறப்பு முகாமிற்கான ஏற்பாடுகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் டாக்டர்கள் மேற்பார்வையில் பகுதி சுகாதார செவிலியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முடீஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்புசிகள் மொத்தம் 451 பேருக்கு போடப்பட்டது.


Next Story