பெரம்பலூரில் ஒரேநாளில் 7,846 பேருக்கு கொரோனா தடுப்பூசி


பெரம்பலூரில் ஒரேநாளில் 7,846  பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

பெரம்பலூரில் ஒரேநாளில் 7,846 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பெரம்பலூர்

தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 38-வது சிறப்பு முகாம்களை நேற்று நடத்தியது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 7,846 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

1 More update

Next Story