சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் நேற்று 26 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.இதில் முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி என மொத்தம் 502 பேருக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையிலான மருத்துவக் குழுவினரால் தடுப்பூசி போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர். இதேபோல், பொள்ளாச்சி நகரம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஏராளமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வால்பாறை, முடீஸ், சோலையாறு நகர் ஆகிய 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கான ஏற்பாடுகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வட்டார மருத்துவர் டாக்டர் பாபுலட்சுமண் மேற்பார்வையில் டாக்டர்கள் பகுதி சுகாதார செவிலியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொண்டனர். வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முடீஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் மொத்தம் 1,264 பேருக்கு போடப்பட்டது.


Next Story